பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய வாகன ஓட்டுநர்.. முதல்வர் நிதியுதவி அறிவிப்பு..!
பள்ளி வாகனம் ஓட்டும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட ஓட்டுனர் மலையப்பன் என்பவர் வாகனத்தில் உள்ள மாணவ மாணவிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சாலையோரம் வாகனத்தை நிறுத்தி அதன் பின் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று முதல்வர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்த ஓட்டுநர் மலையப்பன் குடும்பத்திற்கு நிதி உதவி செய்துள்ளார். இது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய பின்னர் தன் உயிரை நீத்த தனியார் பள்ளி வாகன ஓட்டுனர் மலையப்பன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 5 லட்சம் என அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உள்ள தனியார் பள்ளி வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனர் மலையப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் வாகனத்தை பாதுகாப்பாக சாலையில் நிறுத்தி வாகனத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், ஓட்டுனர் மலையப்பன் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்
Edited by Siva