திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (15:17 IST)

வேலூர்ல வரவேற்பா.. ப்ளானை மாற்றிய எடப்பாடியார்! – சசிகலாவுடன் மோதல் ஆரம்பமா?

பிப்ரவரி 8ம் தேதி தமிழகம் வரும் சசிக்கலாவுக்கு வரவேற்பு அளிக்க உள்ள நிலையில் முதல்வர் பிரச்சாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவர் குணமாகியுள்ளதால் பிப்ரவரி 8ம் தேதி பெங்களூரிலிருந்து தமிழகம் வர உள்ளதாகவும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

பிப்ரவரி 8ம் தேதி சசிக்கலா வரும் நிலையில் அவருக்கு வரவேற்பு அளிக்க வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் ஏற்பாடாகி வருகிறது. இந்நிலையில் தனது தேர்தல் பிரச்சார பயணத்தில் மாற்றம் செய்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதே பிப்ரவரி 8ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே சமயத்தில் சசிக்கலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரே பகுதி வழியாக பயணிக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.