1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (14:49 IST)

நள்ளிரவில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்....

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் நேற்று பகல் நேரத்தில் பல முறை மின்தடை ஏற்பட்ட நிலையில் இரவு மின்சாரம் துண்டுக்கப்பட்டு நீண்ட ஆகியும் மீண்டும் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
 
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நள்ளிரவில் பாடியநல்லூரில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மின்சாரம் பாதிப்பு குறித்து பணியாளர்கள் ஆய்வு செய்து பணியாற்றி வருவதாக சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
பேச்சுவார்த்தையின் போது பழுது சீரமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் 1மணி நேரத்திற்கு மேல் நீடித்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.