சுண்டல் மடிக்கவா…? புத்தகம்…! பிரபல நடிகரின் கிண்டல் பேச்சு…
சென்னையின் இன்று ‘கலைஞருக்கு கலை வணக்கம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதி பேசிய இயக்குநர் கரு, பழனியப்பன் கலைஞரின் நினைவிடத்தில் புத்தகம் வைத்து செல்லுங்கள் என்று பேசினார்.
அதன் பிறகு பேச வந்த நடிகர் ராதாரவி கூறியதாவது:
'கரு பழனியப்பன் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் நான் மறுக்கிறேன். கருணாநிதி கல்லறையில் புத்தகங்களை வைத்து விடுங்கள் யாராவது படிப்பார்கள் என்று அவர் கூறினார்.
அப்படி ஒருவேளை மெரீனா பீச்சில் புத்தகங்களை வத்தால் அது தப்பான இடம் என்பதால் யாராவது அதை சுண்டல் மடிக்க எடுத்து சென்று விடுவார்கள்…யாராவது வந்தால் படிப்பார்கள் என்று சொன்னீர்கள். நம் ஸ்டாலின் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். அதாவது தன்னை பார்க்க வருபவர்கள் பொன்னாடைகளுடன் வர வேண்டாம். புத்தகங்களைக் கொண்டு வாருங்கள் 'என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
அந்த புத்தகங்களைப் பெற்று நூலகத்திற்கு அளித்து விடுகிறார்.
இவ்வாறு நடிகர் ராதாரவி பேசினார்.