1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (17:24 IST)

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி - 140 பேர் கதி என்ன?

ஒரு படப்பிடிப்பிற்காக இமாசலப்பிரதேசம் சென்ற நடிகர் கார்த்தி மற்றும் படப்பிடிப்பு குழுவினர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
இமாசலப்பிரதேசம் குளு மணாலியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
 
இந்நிலையில், நடிகர் கார்த்தி தற்போது தேவ் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குளு மணாலியில் நடந்து வருகிறது. இதற்காக நடிகர் கார்த்தி உட்பட சென்னையிலிருந்து 140 பேர் இமாசலப்பிரதேசம் சென்றிருந்தனர். 
 
ஒரு மலை உச்சியில் நடிகர் கார்த்தி நடித்த காட்சிகளை படம் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென கடும் மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டது.  இதனால், அதிர்ச்சி அடைந்த படக்குழு, கடும் போக்குவரத்து நெரிசலுக்கிடையே கார்த்தியை காப்பாற்றி ஒரு கிராமத்தில் தங்க வைத்துள்ளனர். 
 
பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் படப்பிடிக்கு சென்ற வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்டு மலைக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைப்பட்டுக் கிடக்கிறது. இதனால், தேவ் படப்பிடிப்புக்கு சென்ற 140 தமிழர்கள் உண்ண உணவின்றியும், பாதுகாப்பு இல்லாமலும் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.