திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 16 ஜூன் 2021 (16:35 IST)

கங்கையில் மிதந்த குழந்தை.. .முதல்வரின் அதிரடி அறிவிப்பு

காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கை ஆற்றில் மிதந்து வந்த ஒரு பெட்டியில் 22 நாட்கள் ஆன பெண் குழந்தையில் உடல் காணப்பட்டது. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநில காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கை ஆற்றில் கடந்த புதன் கிழமை அன்று 22 நாட்கள் ஆன குழந்தை கைவிடப்பட்ட நிலையில்  ஒரு மரப்பெட்டியில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அக்பெண் குழந்தை வளர்வதற்குத் தேவையான  பொறுப்பை  அரசு ஏற்றுக் கொள்ளும் என தெரிவித்தார்.

மேலும், தாத்ரி காட் என்ற பகுதியில்  குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அங்குள்ளவர்கள் குழந்தையை மீட்டுள்ளதாகத்தகவல் வெளியாகிறது. கங்கை நதியில் கண்டெடுக்கப்பட்டதால் குழந்தைக்கு கங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.