1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 12 மே 2021 (15:01 IST)

மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை: கமல்ஹாசன் டுவிட்

கங்கை நதியைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு 20,000 கோடி ஒதுக்கிய நிலையில் அந்த பணத்தில் கங்கை நதியும் காக்கப்படவில்லை, மக்களும் காக்கப்படவில்லை உள்ள என கமலஹாசன் டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் கங்கை நதியில் மிதந்து வருவதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி காரணமாக பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் 
 
கங்கை நதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் மிதந்து வருவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில் கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. மக்களையும் காக்கவில்லை. நதிகளையும் காக்கவில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாகக் கலைகின்றன.