Daily Horoscope
✕

மாடியில் இருந்து தவறி விழுந்த 8 மாத குழந்தை – உயிர்தப்பிய அதிர்ஷ்டம் !

Updated: புதன், 11 டிசம்பர் 2019 (10:33 IST)
சென்னையில் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்த 8 மாதக்குழந்தை ஒன்று கீழே விழுந்து உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் மிண்ட் பகுதியில் உள்ளது அடுக்குமாடி குடியிருப்பு. இதன் 5 ஆவது மாடியில் ஜினிஷா என்ற 8 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக பால்கனி கம்பிகளின் இடைவெளி வழியாக கீழே விழுந்தது.

விழுந்த குழந்தை கீழே நிற்க வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ஒன்றில் விழுந்து பின்னர் தரையில் விழுந்துள்ளது. இதனால் குழந்தைக்கு பெரிதாகக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் உடனடியாக மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றபடி பயப்பட வேண்டிய அளவுக்கு எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளனர்

எல்லாம் காட்டு

ஷாவோமியின் புதிய ரெட்மி கே100 அல்ட்ரா ஸ்மார்ட்போன்.. அடுத்த தலைமுறை 2nm சிப்செட்..

2 நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் செல்லும் பிரதமர் மோடி.. முக்கிய பேச்சுவார்த்தை..

தீபாவளி பண்டிகைக்கு ரூ.72000 கோடிக்கு தங்கம் வாங்கிய இந்தியர்கள்..வரலாறு காணாத விற்பனை...

நாளை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. 4,100 போலீஸார் குவிப்பு... கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல்... 3வது புயலும் ஆந்திராவை நோக்கி செல்கிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments