ஆன்லைன் ரம்மிக்கு தடை: தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய ஆலோசனை
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடுவதன் மூலம் ஏராளமானோர் பணத்தை இறந்துள்ளனர் என்பதும் ஒரு சிலர் தற்கொலை செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்யும் விதத்தில் அரசு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டது என்பது குறிப்பிடதக்கது
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்வது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதயச்சந்திரன், பணீந்திர ரெட்டி, மற்றும் டிஜிபி ஆகியோர் கலந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன