ஓய்வு பெற்றனர் இறையன்பு, சைசேந்திரபாபு.. பிரியாவிடை அளித்த அதிகாரிகள்..!
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு மற்றும் டிஜிபி ஆக இருந்த சைலேந்திரபாபு ஆகிய இருவரும் சற்று முன் ஓய்வு பெற்றனர்.
பணி ஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சென்னையில் காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 36 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் பணிபுரிந்த சைலேந்திரபாபு அவர்கள் ஓய்வு பெற்றுள்ளார்
அதேபோல் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கு தலைமைச் செயலாக அதிகாரிகள் பிரியாவிடை அளித்தனர். புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா பொறுப்பேற்றுள்ளார் என்பதும் அதேபோல் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva