புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:58 IST)

தமிழக ஆளுநரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

சட்ட முன்வடிவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பும் தபால்காரர் வேலையை மட்டும் ஆளு நர் செய்யட்டும் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ரவியை விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்சனை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க இயலாது  எனச் சமீபத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தெரிவித்தனர்.

இ ந் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆளு நர் ரவியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளாதாவது:

நீட் சட்ட முன் வடிவிற்கு ஆளு நர் ஒப்புதல் அளிக்கத் தேவையில்லை. அதற்கான அதிகாரமும் அவருக்கு இல்லை. நாங்கள் சட்டம் இயற்றிவிட்டோம். அதனால் அதை குடியரசுக்கு அனுப்பும் போஸ்ட் மேன் பணியைச் சரியாகப் பார்க்க வேண்டும். அந்தப் போஸ்ட்மேன் பணியைக் கூட அவர் சரியாகச் செய்யாமல் இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என முதலவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.