செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

Modi
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது என்பதும் தினசரி பாதிப்பு தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு ஏற்கனவே மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து தற்போது அடுத்த கட்டமாக அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 27-ஆம் தேதி ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து காணொளி மூலம் பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுக்கு அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது