மக்களின் உயிரைக் காக்கும் விலை உயர்ந்த மருந்துகள் கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவு !
தமிழகத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை ஒழித்து மக்களைப் பாதுக்காக்க மத்திய – மாநில அரசுகள் இணைந்து பணியாற்றிக் கொண்டுள்ளன.
இந்நிலையில் , கொரொனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் TOCILIZUMAB- 1200 குப்பிகள், REMDEVISIR – 42, 200 குப்பிகள், ENOZAPARIN – 1,00,000 குப்பிகள்
போன்ற விலை உயர்ந்த மருந்துகள், ஊசிகளை மருத்துவ சேவைக்கழகம் மூலம் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகிறது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது :
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களைக் காக்கவும், சிகிச்சைக்காகவும் விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்; அவை மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என கூறியுள்ளார்
.
மேலும், பாதி மருந்துகள் வந்திருக்கும் நிலையில் மீதி மருந்துகள் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதாகவும், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.