1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூன் 2020 (07:59 IST)

எல்லையில் பதற்றம் -சீன நிறுவனங்களுடனான 5000 கோடி ரூபாய் ஒப்பந்தங்களை நிறுத்திய மாநிலம்!

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லைப் பதற்றத்தை அடுத்து 5000 கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது மகாராஷ்டிரா அரசு.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா எல்லை தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சம்மந்தமாக நடந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர். சீன தரப்பில் இருந்து பலியான வீரர்களின் விவரம் வெளியாகவில்லை. இதனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலும் உறவு சுமூகமாக இல்லை.

இதையடுத்து இந்தியாவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சீன நிறுவனங்களுடன் ரூ.5,000 கோடி மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்களை நிறுத்திவைத்துள்ளது மகாராஷ்டிரா அரசு. இதுகுறித்து பேசியுள்ள அம்மாநில தொழில்துறை அமைச்சர்,’இந்த முடிவு மத்திய அரசுடன் கலந்தாலோசித்துதான் எடுக்கப்பட்டுள்ளது. சீனா தவிர மற்ற நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த மாநில அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது’ எனக் கூறியுள்ளது.