ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (15:06 IST)

முதல்வர் பழனிசாமி கொச்சைபடுத்திவிட்டதாக , சட்டசபையில் திமுக வெளிநடப்பு

தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இதற்கு ஒரு முடிவு எட்டப்படும்வரை தமிழக அரசு தொடர்ந்து போராட்டும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி கூறினார். இதுகுறித்த விவாதம் இன்று நடைபெற்றது.
இதில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, தபால் துறை போட்டித்தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதாக சிறப்பு தீர்மான்ம் கொண்டு வந்து பேசினார்.  குறிப்பாக தமிழர்களை மத்திய அரசுப் பணியிடங்களில் சேர்கக் கூடாது என்று மத்திஅரசு திட்டமிட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
 
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தபால்துறை தேர்வில் தாள் 1 ல் மட்டுமே தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, தாள் 3ல்  பிரச்சனை இல்லை என்று கூறினார்.மேலும் இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.
 
பின்னர் திமுக எதிர்கட்சித் துணைத்தலைவர், துரைமுருகன், இருமொழிக்கொள்கையில் அரசு ஒருமித்தகருத்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுமா என்று கேட்டார். 
 
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் , தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அதிமுக, திமுக இணைந்து குரல் கொடுப்போம் என்று பதிலளித்தார், அப்போது துரைமுருகன் , திமுக எம்பிக்கள்  குரல் கொடுப்பார்கள், ஆனால் தமிழக அரசு மத்திய அரசை கண்டித்து ஏன் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று கேட்டார்.

அப்போது துணைமுதல்வர் குறிக்கிட்டு இவ்விவாதம் குறித்துநாளை எம்பிக்கல் குரம் எழுப்ப உள்ளார்கள் என்று தெரிவித்தார். இதில் குறிக்கிட்ட முதல்வர் பழனிசாமி : எதிர்கட்சிகல் வெளிநடப்பு செய்யவே இவ்விவகாரத்தை ஒரு சாக்காக வைத்து கொண்டுள்ளதாகக்கூறி விமர்சித்தார்.
 
இதனைத்தொடர்ந்து, திமுக ,காங்கிரஸ்,உள்ளிட்ட எதிர்கட்சியில் இடம்பெற்ற கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்ததாகத் தெரிவித்தனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.