1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (14:51 IST)

23 கோடி பறிமுதல்; 700 கோடி கணக்கில் இல்லை! – செட்டிநாடு குழும ரெய்டில் தகவல்!

தென்னிந்தியாவில் பிரபலமான செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதனையில் ஏராளமான பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், அரசு அதிகாரி வீடுகள் என பல பகுதிகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதலாக செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் உள்ள செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 60 இடங்களில் நடந்த சோதனையில் 23 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சொத்துக்கள் 110 கோடி ரூபாய் அளவிற்கு கண்டறியப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது ரூ.700 கோடி மதிப்பிலான வருமானத்தை கணக்கில் காட்டததாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.