மதுபோதையில் வாகனம் ஓட்டியதால் டூவீலர் பறிமுதல்.. மன உளைச்சலால் இளைஞர் தற்கொலை..!
மது போதையில் வாகனம் ஓட்டியதால் இளைஞரின் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தனியார் பைக் டாக்ஸி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் பாண்டி பஜார் வழியாக சென்று கொண்டிருந்தபோது அவரை பரிசோதனை செய்த போலீசார் அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக அவரது டூவீலரை பறிமுதல் செய்தனர்.
இந்த இருசக்கர வாகனம் இருந்தால்தான் தன்னுடைய பிழைப்பு நடக்கும் என்றும் தன்னுடைய வாகனத்தை திருப்பி தருமாறும் அவர் போலீசாரிடம் கெஞ்சியதாக தெரிகிறது
ஆனால் அபராத தொகையை கட்டிவிட்டு பைக்கை எடுத்து செல்லுமாறு போலீசார் கூறியதால் மன உளைச்சல் அடைந்த சூரியமூர்த்தி வீட்டுக்கு வந்து திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் சூரியமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது
Edited by Siva