திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 ஜூன் 2022 (10:44 IST)

பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்த சென்னை வாலிபர்: தீவிர விசாரணை!

bsnl
கேரள வாலிபர் ஒருவர் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை ஹேக் செய்தது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
சென்னையில் கடந்த 15 நாட்களில் 72,000 லேண்ட்லைன் இணைப்புகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் அழைப்புகள் செய்யப்பட்டுள்ளதை பிஎஸ்என்எல் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
 
இதனையடுத்து இதுகுறித்து விசாரணை செய்த போது சந்தேகத்துக்கிடமான ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் உள்ள 7 சிம் கார்டு பெட்டிகளை காவல்துறையினர் மீட்டதாகவும் ஒவ்வொரு பெட்டியிலும் 32 சிம்கார்டுகள் இருந்ததாகவும் தெரிய வந்ததை அடுத்து அந்த வீட்டில் இருந்த நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்தபோது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை ஹேக் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து அவர் தீவிரவாதியா? அவர் எதற்காக பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை ஹேக் செய்தார் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.