1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (09:45 IST)

சென்னை - கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் ரயில்: பொதுமக்கள் கோரிக்கை

தமிழகத்தில் சென்னை - பெங்களூர் மற்றும் சென்னை - கோவை ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் சென்னை கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் எழுப்பி உள்ளனர் 
 
ஏற்கனவே சென்னை மதுரை வந்தே பாரத் ரயில் குறித்த ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் சென்னை கன்னியாகுமரி வரை அந்த ரயிலை நீடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
சென்னையில் இருந்து திருச்சி மற்றும் மதுரைக்கு அதிக ரயில்களை இயக்கப்படுகிறது என்றும் ஆனால் நெல்லை கன்னியாகுமாரி பகுதிகளுக்கு ஒரு சில ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும் எனவே சென்னையில் இருந்து திருநெல்வேலி கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக சென்னை கன்னியாகுமாரி இடையே வந்தே பாரத ரயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது. 
 
சென்னை மதுரை இடையே இயக்க இருக்கும் வந்தே பாரத் ரயில் கன்னியாகுமாரி வரை நீடிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
Edited by Siva