திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (10:52 IST)

சென்னை - திருவள்ளூர் புறநகர் ரயில்சேவை பாதிப்பு: பயணிகள் அவதி!

train
சென்னை - திருவள்ளூர் இடையே இயங்கும் புறநகர் ரயில் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி உள்ளனர் 
 
சென்னை வியாசர்பாடி - வில்லிவாக்கம் இடையே உயர்மின் அழுத்த மின் வடத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னை - திருவள்ளூர் புறநகர் ரயில்சேவை திடீரென பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரயில் புறப்பட தாமதமாகும் என்பதால் பயணிகள் இறங்கி நடந்து சென்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் இன்னும் சில மணி நேரத்திற்கு இந்த பாதையில் ரயில்கள் இயங்காது என்று கூறப்படுகிறது