வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 ஜனவரி 2022 (07:57 IST)

சென்னை சுரங்கப்பாதைகள் மற்றும் பிரதான சாலைகளின் போக்குவரத்து நிலவரம்!

சென்னையில் கடந்த சில நாட்களாக திடீரென கனமழை பெய்து வருவதையடுத்து சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
சென்னையில் உள்ள மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் இருசக்கர சுரங்க பாதைகள் மூடப்பட்டு உள்ளதாகவும் எனவே இந்த பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று வழியில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
அதேபோல் கேகே நகர் ராஜமன்னார் காலையிலும் மாலையிலும் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளதால் இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
 
மேலும் வாணிமஹால் வழியாக செல்லும் பேருந்துகள், பாரதிராஜா ஜங்ஷன் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.