திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 மே 2021 (10:34 IST)

தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை; பயிற்சியாளர் கைது! – அதிகரிக்கும் நடவடிக்கைகள்!

சென்னையில் தடகள வீராங்கனை ஒருவர் தனது பயிற்சியாளர் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் வழக்கை தொடர்ந்து மாணவிகள் தங்கள் பாலியல் புகார்களை அளிக்க தனி வாட்ஸப் எண் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து பல மாணவிகள், முன்னாள் மாணவிகள் தங்கள் பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 19 வயது தடகள வீராங்கனை ஒருவர் தனது பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை தருவதாகவும், வெளியே சொன்னால் கொலை செய்வதாக மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் நாகராஜனை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்துள்ளனர்.