1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (10:12 IST)

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

Arrest
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை கீழ்பாக்கத்தில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த தயிர் வியாபாரி சித்திக் என்பவரை ஏமாற்றி அவரிடம் இருந்து 34,500 ரூபாயை சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி பறித்தtஹாக குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்த விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அவரை கைது செய்ய உத்தரவிட்டார். 
 
இந்த நிலையில் கைதான எஸ்.எஸ்.ஐ பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran