சென்னை முழுவதும் கொரோனா: இழுத்து மூடப்பட்ட சாலைகள்!
சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவியுள்ளதை தொடர்ந்து அண்ணாசாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டமாக சென்னை மாறியுள்ளது. சென்னையில் 261-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனால் சென்னையில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக சென்னை மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி சென்னை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து திருவெல்லிக்கேணி வாலாஜா சாலை சிக்னல் வரை முழுவதுமாக சாலை மூடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதி வழியாக எந்தவொரு வாகனமும் செல்ல முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.