வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (08:49 IST)

வேலையை காட்டும் வடகிழக்கு பருவமழை: சென்னை ரெய்ன்ஸ்!!

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 
 
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளில் நேற்றிரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தாம்பரம், வண்டலூர் உள்பட பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. நள்ளிரவு முதல் தொடந்த இந்த மழை அதிகாலையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூரிலும் கொட்டி தீர்த்தது. 
 
நல்ல மழையின் காரணமாக சாலையில் நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை மட்டுமின்றி தூத்துக்குடி, கோவில்பட்டி, திருப்பூர், நெல்லை, தென்காசி ஆகிய இடங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது.