திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 மே 2022 (15:13 IST)

ஆர்.ஏ.புரம் வீடுகள் இடிப்பு; உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ளது ஆர்.ஏ.புரம். இந்த பகுதியில் ஏராளமான எளிய மக்கள் வசித்து வந்த நிலையில் அப்பகுதியில் வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் முதலாக ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தனது வீடு இடிக்கப்படுவதை எதிர்த்து அப்பகுதி முதியவர் ஒருவர் தீக்குளித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.ஏ.புரத்தில் வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. அதில் ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், அந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.