திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (08:24 IST)

போலீஸை வெட்டிய ரவுடி; என்கவுண்ட்டர் செய்த போலீஸ்! – சென்னையில் பரபரப்பு!

சென்னையில் கஞ்சா வியாபாரியான ரவுடி ஒருவரி பிடிக்க சென்றபோது அவர் போலீஸாரை தாக்கியதால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்து வந்தவர் சங்கர். கஞ்சா விற்பனை மட்டுமல்லாது மேலும் பல வழக்குகளில் இவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீஸ் குழு ஒன்று சங்கரை பிடிக்க முயன்றுள்ளனர். போலீஸாரிடமிருந்து தப்பிக்க காவலர் ஒருவரை சங்கர் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் சங்கரை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தூத்துக்குடியில் ரவுடியை பிடிக்க சென்ற காவலர் வெடிக்குண்டு வெடித்து இறந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் ரவுடி என்கவுண்டர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.