திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 5 மே 2022 (17:54 IST)

கிரிப்டோ கரன்சி மோசடியில் கோடிகளை இழந்த காவலர்கள்: சென்னை காவல் ஆணையர் சுற்றறிக்கை

cripto currency
கிரிப்டோகரன்சி மோசடியில் காவலர்களை கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததை அடுத்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையை சேர்ந்த இரண்டு காவலர்கள் கிரிப்டோகரன்சி மோசடியில்  ஒன்றரை கோடி  ரூபாய் இழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்பவேண்டாம் என்றும் அவர்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் சங்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 
 
தங்களது ஊதியத்தை நியாயமான முறையில் வங்கிகளில் முதலீடு செய்யுங்கள் என்றும் அவர் காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கிரிப்டோகரன்சி மோசடியில் காவலர்களே கோடிக்கணக்கில் பணத்தை இழந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது