திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (13:00 IST)

நடிகர் விமல் மீது ரூ.5 கோடி மோசடி புகார்: திரையுலகினர் அதிர்ச்சி!

vimal
பிரபல நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி என்பவர் 5 கோடி ரூபாய் மோசடி புகார் காவல்நிலையத்தில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
விமல் நடித்த மன்னார் வகையறா என்ற படத்தின் தயாரிப்பின்போது நடிகர் விமல் தயாரிப்பாளர் கோபியிடம் ரூபாய் 5 கோடி கடன் பெற்றுள்ளார். இந்த கடனுக்கு பதிலாக மன்னார் வகையறா படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக அவர் கூறியிருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் மன்னார் வகையறா படத்தின் லாபத்தில் பங்கு தராமல், தான் கொடுத்த 5 கோடி ரூபாயும் திருப்பி தரவில்லை என்றும் பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் விமல் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் தயாரிப்பாளர் கோபி புகார் மனு அளித்துள்ளார் 
 
இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.