வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 மே 2023 (06:37 IST)

நிர்வாணமாக காட்டும் கண்ணாடி, கோபுர கலசம்..!? – சென்னையில் உலா வந்த ‘சதுரங்க வேட்டை’ டைப் கும்பல்!

சென்னையில் ‘சதுரங்க வேட்டை’ படத்தில் வருவது போல மோசடி சம்பவங்களை செய்து பலரை ஏமாற்றி வந்த கும்பலை போலீஸார் பிடித்துள்ளனர்.

மண்ணுளி பாம்பிற்கு லட்சக்கணக்கில் பணம், கோபுர கலசத்தில் பாசிட்டிவ் வேவ்ஸ், ஈமு கோழி என பல வகையில் பலரை மோசடி செய்யும் கும்பல் குறித்து எடுக்கப்பட்ட படம் ‘சதுரங்க வேட்டை’. தற்போது இந்த பட பாணியில் பல மோசடிகளை செய்து வந்த கும்பலை போலீஸார் பிடித்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான ஒரு கும்பல் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த விடுதியில் சோதனை செய்தபோது சிலர் தங்கி இருந்த அறையில் ஒரு டூப்ளிகெட் துப்பாக்கி, தோட்டாக்கள், கோபுர கலசங்கள், கருப்பு அரிசி, போலீஸ்காரர்கள் போன்ற போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

உடனடியாக அந்த அறையில் தங்கியிருந்த பெங்களூரை சேர்ந்த அந்த நபர்களை கைது செய்து போலீஸார் விசாரித்ததில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.

பெண்கள் ஆடை அணிந்திருந்தாலும் நிர்வாணமாக காட்டும் எக்ஸ்ரே கண்ணாடி தங்களிடம் உள்ளதாக கூறி நல்ல பணம் உள்ள பார்ட்டிகளை குறி வைத்துள்ளது இந்த கும்பல். அவர்களிடம் முன்னதாக இருவரை நிர்வாணமாக நடிக்க வைத்து எடுத்த வீடியோக்களை காட்டி, இந்த கண்ணாடியை வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும் என கூறி பல லட்சங்களை முன் பணமாக வாங்கி மோசடி செய்து வந்துள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் அவர்களிடம் கோபுர கலசங்கள் கண்டெடுக்கப்பட்டதால் கோபுர கலசங்களை கோவில்களில் இருந்து திருடினார்களா? இதுபோல வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்று போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K