கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!
சென்னை அருகே அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் எளிதாக சென்றடையும் வகையில், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில் 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில், சாலை மேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த அறிக்கை தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த திட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடத்தின் நீளம்: 15.46 கிமீ
உயர்த்தப்பட்ட ரயில் நிலையங்களின் எண்ணிக்கை: 13
மதிப்பிடப்பட்ட செலவு: ₹9,335 கோடி
மேலும், இந்த மெட்ரோ ரயில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva