1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 22 ஜூன் 2023 (14:05 IST)

இன்று முதல் 5 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் 26 ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா,  தென் தமிழக கடலோர பகுதி மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எனவே இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva