புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (16:57 IST)

தென்மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு-வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கிழக்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனம், சென்னையில்  அடுத்த48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று கூறியுள்ளது.

கடலூர் மாவட்டம் சாத்தப்பாடியில் மாரியம்மன் கோயிலில் மாசி மாதத் திருவிழாவின்போது இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் 6 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழகு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில நாட்களாக லேசான மழை பெய்து வரும் நிலையில், வரு 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில், 33டிகிரி செல்சியஸ் அதிபட்சமாக, 23டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை குறைந்தபட்சமாக நிலவும் என்று கூறியுள்ளது.