அதிகரிக்கும் கொரோனா தொற்று: சென்னை டேஞ்சர் ஏரியாவா?
கொரோனாவால் சென்னையில் அச்சப்படக்கூடிய சூழல் இதுவரை எங்கும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்து கோவையில் 60 பேர்களும், திண்டுக்கல்லில் 46 பேர்களும், திருநெல்வேலியில் 40-பேர்களும், திருச்சியில் 36 பேர்களும் ஈரோட்டில் 32 பேர்களும், நாமக்கல்லில் 33 பேர்களும் ராணிப்பேட்டையில் 27 பேர்களும் செங்கல்பட்டில் 24 பேர்களும் மதுரையில் 24 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனாவால் சென்னையில் அச்சப்படக்கூடிய சூழல் இதுவரை எங்கும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், வீடு வீடாக ஆய்வு செய்யும்போது மக்கள் மறைக்காமல் தங்களிடம் உள்ள உடல்நலப் பிரச்னைகளை கூற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.