Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா! – ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 21 ஏப்ரல் 2022 (14:53 IST)
சென்னையில் ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் கொரோனா வெகுவாக குறைந்த நிலையில் தற்போது தினசரி 31 என்ற அளவில் பாதிப்புகள் இருந்து வருகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது சில மாநிலங்களில் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை ஐஐடியில் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக வெளியான செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மற்ற மாநிலங்களில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சென்னை ஐஐடியில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான தாக்குதல்!.. 5 ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரிப்பு!...

25 வயதுக்குள் கடன்!.. சம்பளம் எல்லாம் காலி!.. தடம் மாறும் Gen Z இளைஞர்கள்!..

தவெக அரசுக்கு மத சாயம் பூச பாஜக முயற்சியா? முதல்வர் விஜய் முன் நிற்கும் பெரும் சவால்...

100 நாளில் ஒரு லட்சம் கோடி முதலீடு பெரிதல்ல.. அதைவிட பெரிய சவால் ஒன்று தவெக அரசுக்கு உள்ளது...

நாளை சுதந்திர தினம்.. முதல்முறையாக கோட்டையில் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்...!

அடுத்த கட்டுரையில்
Show comments