புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 19 ஜனவரி 2022 (19:23 IST)

விளையாட்டு சங்கங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நிதி உதவி வழங்கினார்கள் என்ற காரணத்திற்காக தகுதியற்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட சங்கத்தை 2 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு விளையாட்டு சங்கமும் அரசிடம் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வீரர்கள் சங்கங்களை நிலவரங்களை அரசிடம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது 
 
நித்யா என்ற வீராங்கனை தொடர்ந்த வழக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் விளையாட்டு சங்க தலைவர், துணைத் தலைவர், செயலாளர் ஆகியோர் விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும் என்றும் தகுதியான வீரர்களை தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்புவது பற்றிய புகார்களை கவனிக்க தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டுமென்றும் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை செலவினம் குறித்த விவரங்களை ஆன்-லைனில் வெளியிட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது