நாளை ஜிப்மர் மருத்துவமனை மூடப்படும் என்ற அறிவிப்புக்கு தடை இல்லை: சென்னை ஐகோர்ட்
ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை பிற்பகல் 2:30 மணி வரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மூடப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட்ட நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக நாளை ஜிப்மர் மருத்துவமனை பிற்பகல் 2:30 மணி வரை மூடப்படும் என்ற அறிவிப்புக்கு தடை இல்லை என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது
முன்னதாக மத்திய அரசின் தரப்பில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டபோது நாளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முக்கிய அறுவை சிகிச்சைகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்று கூறியதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ஏற்கனவே அறிவித்தபடி நாளை பிற்பகல் 2:30 மணி வரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மூடப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Edited by Siva