1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 20 ஜனவரி 2024 (20:56 IST)

ராமர் கோயிலுக்கு துர்புத்தி உள்ள சிலர் வரவில்லை -கங்கனா ரனாவத்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவர், தமிழில், தாம்தூம், தலைவி, சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
 

இவர், இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறி வருகிறார்.

 சினிமாவின் நடிப்பது மட்டுமின்றி, பாஜகவுக்கு ஆதரவு கருத்துகள் கூறி வருகிறார்.
,
இந்த நிலையில், உத்தர பிரேதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறு நாள் நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்விழாவில் கலந்துகொள்ள நடிகை கங்கனா ரனாவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் மக்கள் நிறைய புண்ணியம் பெறுகிறார்கள். வாடிகன் நகரத்திற்கு  உலகளவில் முக்கியத்துவம்  இருப்பதைப் போன்று அயோத்தி ராமர் கோயில் நமக்கு முக்கியம்.  ராமர் கோயிலுக்கு துர்புத்தி உள்ள சிலர் வரவில்லை. வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமராஜ்ஜியம் மீண்டும் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளார்.