Daily Horoscope
✕

12ஆம் வகுப்பு தேர்வு ரத்துக்கு இடைக்கால தடையா?

Written By siva
Updated: புதன், 16 ஜூன் 2021 (12:46 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து என தமிழக அரசு உறுதி செய்ததை அடுத்து அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராம்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்
 
இந்த மனுவில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்ட பிறகு தான் இது குறித்து முடிவு எடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் ராம்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு வரும் 23-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. இந்த விசாரணையின் முடிவில் தான் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லுமா? என்பது தெரிய வரும்.

எல்லாம் காட்டு

கமலுக்கு ஒரு வாரம்தான் டைம்!.. சண்டியர் தலைப்பை மாத்தணும்.. கிருஷ்ணசாமி கெடு...

கோல்ட் பிளாக் சிகரெட் விலை உயர்வு!.. ITC நிறுவனம் அதிரடி முடிவு...

மோடியை கேள்வி கேட்ட நார்வே பத்திரிகையாளருக்கு விசா மறுப்பு.. கடைசி நிமிடத்தில் பரபரப்பு..

அமிதாப் பச்சனின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... காலிஸ்தான் நேஷனல் ஆர்மி' பெயரில் வந்ததால் பரபரப்பு...

சொந்த வீடு கனவை நினைவாக்க!.. வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விஜய் அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments