வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (09:36 IST)

நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு 3 மணிநேர அறுவை சிகிச்சை.. சென்னை மருத்துவர்கள் தகவல்..!

நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு மூன்று மணி நேரம் சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
நாங்குநேரியில் சாதி கொடுமையால் கடுமையாக தாக்கப்பட்ட மாணவரின் இரண்டு கைகளில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ததாகவும் இந்த அறுவை சிகிச்சை சுமார் 3 மணி நேரம் நடந்ததாகவும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  
 
பாதிக்கப்பட்ட மாணவரை பரிசோதனை செய்து அவருக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்ததாகவும் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  
 
மேலும் மாணவரின் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவு இருந்ததாகவும் எலும்பு முறிவுக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர் 
 
மேலும் மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து மாணவனை கண்காணித்து வருவதாகவும் அவருக்கு மனநிலை கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva