Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதால் பரபரப்பு

Updated: வியாழன், 20 செப்டம்பர் 2018 (08:03 IST)
வங்கக்கடலில் நேற்று ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக நேற்று சென்னை வானிலை மையம் எச்சரித்திருந்தது. இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு புயல் அபாயம் உள்ளதாக தெரிகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் வடமாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக சென்னையிலும் இன்று பல இடங்களில் மாலை அல்லது இரவில் கனமழை பெய்யும் என்றும் அதேபோல் மணிக்கு 65 முதல் 75 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

எல்லாம் காட்டு

கறிக்கோழி விற்பனை கடையடைப்பு போராட்டம் வாபஸ்!..

யாரா இருந்தாலும் விட்ராதீங்க!.. ஆக்சன் எடுங்க!.. விஜய் போட்ட ஆர்டர்!...

டெல்லி போராட்டம்!.. மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!. பணிந்த ஒன்றிய அரசு!...

இனிமேல் உனக்கு துணை நிற்பேன்!.. மகனை தூக்கி கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ்!..

வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. முக்கியமாக கவனிக்க வேண்டியது எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments