திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 14 ஜனவரி 2019 (08:16 IST)

மாட்டுப் பொங்கலன்று இறைச்சி விற்பனைக்குத் தடை!

பொங்கலை அடுத்த நாளான மாட்டுப் பொங்கலன்று சென்னை மாநகராட்சியில் உள்ள இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் மாநகராட்சியின் கால்நடை மருத்துவத் துறையால் இறைச்சிக்கூடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜனவரி 16 மாட்டுப் பொங்கலன்று சென்னை மாநகராட்சியின் இந்த கால்நடை மருத்துவத் துறையின் கீழ் இயங்கி வரும் அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாட்டுப் பொங்கலன்று வழக்கமான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட  இறைச்சி விற்பனை செய்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு தனியார் இறைச்சிக் கூடங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களுக்கும் பொருந்தும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

எனினும் இந்த உத்தரவு சென்னைக்கு மட்டுமா அல்லது தமிழகம் முழுவதுமா என்ற விவரம் தெரியவில்லை.