செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 மே 2021 (13:22 IST)

நாளை நேர்காணல், மறுநாள் பணியில்..! – மருத்துவர் பணிக்கு சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்காலிக பயிற்சி மருத்துவர்கள் பணிக்கு மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவியுள்ள நிலையில் தலைநகர் சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் சென்னையின் பல இடங்களில் தனி கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையங்களில் பணிபுரிய தற்காலிக பயிற்சி மருத்துவர்கள் 300 பேரை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இந்த தற்காலிக மருத்துவர் பணியில் சேர விரும்புவோர் 13.05.2021 மதியம் 2 மணிக்குள் தங்கள் மருத்துவ சான்றிதழ் நகல் மற்றும் தேவையான பிற சான்றுகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான நோட்டீஸை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.