நீதிபதி சந்துருவின் அறிக்கையை கிழித்தெறிந்த பாஜக உறுப்பினர்... சென்னை மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு
சென்னை மாநகராட்சி கூட்டம் நடந்தபோது அதில் பாஜக உறுப்பினர் உமா என்பவர் முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கையை கிழித்தெறிந்து விட்டு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சி கூட்டம் இன்று நடந்த போது ஓய்வு பெற்ற நீதிபதி சமீபத்தில் தமிழக அரசு இடம் மாறித்த அறிக்கையை பாஜக உறுப்பினர் உமா கிழித்தெறிந்தார். சாதிபாகுபாடுகளை களைய வேண்டும் என நீதிபதி முன்னாள் நீதிபதி சந்திர சந்துரு சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட நிலையில் இந்த அறிக்கை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் உமா என்பவர் இந்த அறிக்கையை கிழித்தெறிந்தார். அதன்பின்னர் திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக உறுப்பினர் உமா, மாமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாஜக உறுப்பினர் உமா பேசியது அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் கூறப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran