வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 19 ஜனவரி 2019 (16:17 IST)

சென்னையில் மீண்டும் இறைச்சிக்குத் தடை – ஏன் தெரியுமா ?

வள்ளலார் ராமலிங்க அடிகளாரின்  நினைவு நாளை முன்னிட்டு வரும் 21-ம் தேதி சென்னையில் உள்ள இறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட கடைகளில் இறைச்சி விற்க வரும் ஜனவரி 21 ஆம் தேதி (திங்கள்) தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திக் குறிப்பில் ‘வரும் 21-ம் தேதி வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. இதேபோல், ஆட்டுக்க்கறி, மாட்டுக் கறி மற்றும் இதர இறைச்சி விற்கவும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேப் போல கடந்த 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கலன்று சென்னையில் இறைச்சி விற்கத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து சட்ட விரோதமாக அதிகமான விலைக்கும்  இறைச்சி விறகப்பட்டதாக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதனால் மீண்டும் இந்த உத்தரவால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.