சென்னையில் இடிந்த குடியிருப்பு; பக்கத்து குடியிருப்புகளிலும் மக்கள் வெளியேற்றம்!
சென்னை திருவொற்றியூரில் குடியிருப்பு கட்டிடம் இடிந்த நிலையில் அருகே உள்ள குடியிருப்புகளை சேர்ந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் டி ப்ளாக் கட்டிடம் நேற்று இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த விபத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று குடியிருப்பும், நிவாரண தொகையும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் டி ப்ளாக் அருகே உள்ள ஈ ப்ளாக் கட்டிடமும் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால் பாதுகாப்பு கருதி அந்த கட்டிடத்தில் இருந்த 52 வீடுகளை சேர்ந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தங்களுக்கும் மாற்றும் வீடுகள் வழங்க அந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.