1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (07:49 IST)

புரெவி புயல் எதிரொலி: எந்தெந்த விமானங்கள் ரத்து?

வங்கக்கடலில் உருவாகிய புயல் நேற்று இரவு இலங்கையை கரை கடந்து தற்போது பாம்பனை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்றும், இந்த புயல் பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே இன்றிரவு கரையை கடக்கும் என்றும் இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த புயல் காரணமாக தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில் தற்போது ஒரு சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
குறிப்பாக மேலும் தூத்துக்குடியிலும் புயல் காரணமாக கன மழை பெய்து வருவதையடுத்து தூத்துகுடி-சென்னை மற்றும் தூத்துகுடி-பெங்களூரு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு தினசரி விமான சேவை செய்யப்பட்டு வருகிறது. தூத்துகுடியிலிருந்து சென்னைக்கு மூன்று விமானங்களும், தூத்துகுடியிலிருந்து பெங்களூருக்கு ஒரு விமானமும் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நான்கு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் மீண்டும் விமான சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு முறையாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது