வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மே 2024 (15:44 IST)

சென்னையில் 106 டிகிரி, திருச்சியில் 108 டிகிரி.. தமிழகத்தில் வாட்டி எடுக்கும் வெயில்..!

Summer
தமிழகத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தினம் தோறும் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி சென்னையில் 106 டிகிரையும் திருச்சியில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடும் அவஸ்தையில் இருப்பதாக தெரிகிறது. 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்றைய 104 டிகிரி பாரன்ஹீட் தொட்டதாகவும் கடல் காற்று உள் நுழைந்தால் மீனம்பாக்கத்தில் வெயில் 106 டிகிரியை தாண்ட வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்
 
அதேபோல் காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் உணர்தல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை அதிக அளவில் பதிவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 ஏற்கனவே திருச்சியில் 108 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மற்ற மாவட்டங்களில் பதிவாகும் வெப்பம் குறித்த தகவல் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் தமிழகம் முழுவதும் வெயில் மிகக் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran