புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (12:33 IST)

மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம்: டாக்காவுக்கு முதல் விமானம்!

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ரூபாய் 1260 கோடியில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் சென்னை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த புதிய முனையம் கட்டப்பட்டது என்பதும் பிரதமர் மோடி சமீபத்தில் இதை திறந்து வைத்தார் என்பதும் தெரிந்ததே. 
 
சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த முனையத்தில் சுமார் 3 கோடி பயணிகளை கையாள முடியும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த புதிய விமான நிலையத்தின் முனையம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த முனையத்திலிருந்து முதல் விமானம் டாக்காவுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி முதல் விமானத்தில் செல்லும் பயணிக்கு விமான நிலைய அதிகாரிகள் மலர்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran