1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 29 ஜூலை 2021 (14:47 IST)

ஆகஸ்ட் 2 வரை மழை பெய்யும் மாவட்டங்கள்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெறும் மாவட்டங்கள் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
தென்மேற்கு பருவ மழை வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது இந்த நிலையில் சற்று முன் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்றும் நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் வரும் 31ஆம் தேதி கோவை, நீலகிரி மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்
 
மேலும் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை பெரியாறு தேவகோட்டை குழித்துறை ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது என்றும் கூறியுள்ளார்
 
மேலும் இன்று முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதி, வடக்கு வங்க கடல் பகுதி மற்றும் மத்திய அரசின் கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது